இமயமலைத் தொடரில் உள்ள சுற்றுலாத் தலமான மணாலியில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலியாயினர்.
மணாலியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நேரு குண்ட் பகுதியில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவு குறித்துத் தகவல் அறிந்ததும் இந்தோ- திபெத் எல்லைக் காவல் படையினர், ஜெனரல் ரிசர்வ் பொறியாளர் படை, உள்ளூர் காவல் படையினர் ஆகியோர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தில் இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மணாலி மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.