புதுச்சேரி துணை நிலை ஆளுநர் முகுத் மிதி பதவி விலகியுள்ளார்.
முகுத் மிதி அவரது சொந்த மாநிலமான அருணாச்சல பிரதேசத்திலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக போட்டியிடுவதால் ஆளுநர் பதவியைத் துறப்பதாகவும், தனது பதவி விலகல் கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி மாநிலங்களவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் கடந்த 8ஆம் தேதி தொடங்கியது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் 15ஆம் தேதி ஆகும். 17ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கு 19ஆம் தேதி கடைசிநாள் ஆகும்.