இந்திய, மியான்மார் நாடுகளுக்கு இடையே உள்துறை செயலர் அளவிலான பேச்சு இன்று துவங்கியது.
இந்தியா தரப்பில் மத்திய உள்துறை செயலர் மதுகர் குப்தாவும், மியான்மார் தரப்பில் உள்துறை துணை அமைச்சர் பிரிகாடியர் ஆகியோர் பேச்சில் பங்கேற்றுள்ளனர்.
இதில் இருநாடுகளுக்கிடையான பாதுகாப்பு குறித்த செயல்பாடுகள், ஆயுதக் கடத்தல், போதைப் பொருட்கள் ஆகியவற்றை தடுத்தல், எல்லை மேலாண்மை, எல்லை தாண்டிய வர்த்தகம் உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்து பேசப்படுகின்றன.
இந்த இரு நாடுகளுக்கும் இது 14வது கட்ட பேச்சு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பேச்சு வரும் திங்கள்கிழமை முடிவடையும். இதற்கு முந்தைய பேச்சு மியான்மரில் கடந்த 2007 பிப்ரவரியில் நடந்தது.