ஜம்மு- காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியில் ஓடி வந்தனர்.
ஸ்ரீநகரில் இன்று காலை 4.27 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.9 ஆகப் பதிவானது.
கடந்த 10 நாட்களில் ஸ்ரீநகரில் மிதமான நிலநடுக்கம் ஏற்படுவது இது ஐந்தாவது முறை என்பதால், இதன்பிறகு ஒருவேளை பெரிய நிலநடுக்கம் காத்திருக்குமோ என்ற வதந்தியும் பரவியது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என்றனர்.