Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிமி மீதான தடை தொடரும் : மத்திய அரசு!

சிமி மீதான தடை தொடரும் : மத்திய அரசு!
, வியாழன், 7 பிப்ரவரி 2008 (20:28 IST)
பாகிஸ்தானில் இருந்து இயங்கிவரும் பல்வேறு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு இயங்கியதாகக் கூறி தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்திற்கு (சிமி) மேலும் 2 ஆண்டுகாலம் தடையை நீட்டித்துள்ளது மத்திய அரசு!

தலைநகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இத்தகவலை உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

இன்று நடந்த பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ள சிமி இயக்கத்தின் மீது தடை நீட்டிப்பது என்று முடிவு செய்தாகக் கூறினார்.

பாகிஸ்தானில் இருந்து இயங்கிவரும் ஹிஸ்புல் முஜாஹிதீன், ஜெய்ஸ்-ஈ-மொஹம்மது, ஹர்கத்-உல்-ஜிஹாதி இஸ்லாமி உள்ளிட்ட மூன்று டசன் இயக்கங்களை இச்சட்டத்தின் கீழ் மத்திய அரசு தடை செய்துள்ளது என்று குறிப்பிடத்தக்து.

சிமி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் லஸ்கர்-ஈ-தயீபா இயக்கத்தில் இணைந்து பயிற்சி பெறுகிறார்கள் என்கின்ற உளவுத்துறை அறிக்கைக்குப் பிறகு, 2001 ஆண்டு செப்டம்பரில் முதல் முறையாக சிமி இயக்கம் தடை செய்யப்பட்டது. 2006 ஆம் ஆண்டு நடந்த மும்பை புறநகர் ரயில்கள் குண்டு வெடிப்பிலும் சிமி இயக்கத்தினர் தொடர்புடையவர்களாக குற்றம் சாற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அவர்களுடைய நடவடிக்கை இப்பொழுதும் சட்டத்திற்குப் புறம்பான வகையில் உள்ளதால் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil