அஸ்ஸாமில் ஒரு பெண் உட்பட 38 உல்ஃபா தீவிரவாதிகள் தங்கள் ஆயுதங்களுடன் ராணுவத்தின் முன்பு சரணடைந்தனர்.
வடகிழக்கு மாநிலங்களில் ராணுவத்தின் தீவிர தேடுதல் நடவடிக்கைகளின் காரணமாகவும், இளைஞர் மீட்பு இயக்கத்தின் பலனாகவும் தீவிரவாதிகள் சரணடைவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அஸ்ஸாமின் பக்ஷா மாவட்டத்தில் உல்ஃபா இயக்கத் தலைவன் நாயன் ககோட்டி தலைமையில் ஒரு பெண் உட்பட 38 தீவிரவாதிகள் ராணுவத்திடம் இன்று சரணடைந்தனர்.
அவர்கள், தங்களிடம் இருந்த 27 பிஸ்டல்கள், 18 கையெறி குண்டுகள், 22 டெட்டனேட்டர்கள், 150 சுற்று ஏ.கே.47 துப்பாக்கி குண்டுகள், 30 கிலோ ஆர்.டி.எக்ஸ் ஆகியவற்றையும் ராணுவத்திடம் ஒப்படைத்தனர்.