தலைநகர் புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று வந்துள்ள மிரட்டல் மின்னஞ்சலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குர்கான் நகரத்தில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் கால் சென்டருக்கு நேற்று வந்த மிரட்டல் மின்னஞ்சலில், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஜனவரி 12 ஆம் தேதி வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து விமான நிலையத்தின் முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி ஹர்ஷ் குமார், குர்கானில் உள்ள உத்யோக் விகார் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.
மின்னஞ்சலை அனுப்பியது யார் என்பதைக் கண்டறியும் முயற்சியில் சைபர் கிரைம் காவலர்கள் இறங்கியுள்ளனர்.