இந்தியா- மங்கோலியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகள் பல நூற்றாண்டுகளுக்கு தொடரும் என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
புது டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மங்கோலியாவின் வளங்கள் பற்றிய புத்தகம் ஒன்றை வெளியிட்ட பிரணாப் முகர்ஜி இவ்வாறு பெருமையுடன் கூறினார்.
''நான் எனது சிறு வயது முதலே செங்கிஷ் கானின் வீரச் செயல்கள் பற்றிப் படித்து வியந்திருக்கிறேன். இந்தியாவிற்கும் மங்கோலியாவிற்கும் இடையில் நல்லுறவுகள், நமது நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் காலத்தில் அதிகமாக மேம்பட்டன.
இரு நாடுகளுக்கும் கலாச்சார ஒற்றுமைகள், வர்த்தகப் பரிமாற்றங்கள் தொடர்ந்து வளர்ச்சியடைய வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு அவையில் நிரந்தர இடத்தைப் பெறவேண்டும் என்ற இந்தியாவின் எண்ணத்திற்கு மங்கோலியா ஆதரவளிப்பதை வரவேற்கிறேன்" என்றார் பிரணாப்.