தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் கட்டணங்களை வசூலிப்பதற்கு இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் புதிய நடத்தை விதிமுறைகளை அறிவித்துள்ளது.
தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய கட்டண பாக்கித் தொகைகளை வசூல் செய்வதில் வெளிப்படையான கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
தனியார் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் நிலுவைத் தொகையை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் முறை தொடர்பாக, இந்திய தொலைபேசி ஒழுங்கு முறை ஆணையத்துக்கு வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் இந்த நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
கட்டண கணக்கீட்டுத் தொடர்பான புகார்களை வாடிக்கையாளர்கள் பதிவு பெற்ற ஏதுவாக இந் நிறுவனங்கள் தங்களுக்காக கணக்குகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள், பணியாளர்கள் தொடர்பான விவரங்களை அதன் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வாடிக்கையாளரிடமிருந்து கட்டணத்தை வசூலிக்க ஏதாவது ஒரு நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப் பட்டால், அது தொடர்பாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கும் தொலைபேசி சேவை நிறுவனங்கள் தகவல் தர வேண்டும் என்றும் புதிய வழிகாட்டு நெறிமுறையில் டிராய் கூறியுள்ளது.