''நாடு முழுவதும் புதிதாக 7,500 ரயில் நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்று மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஃபரூக்காபாதில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் லாலு, ''உலகிலேயே மிகப்பெரிய ரயில் இணைப்புகளைக் கொண்டுள்ள இந்திய ரயில்வேத் துறையை மேம்படுத்தும் வகையில் நாடு முழுவதும் புதிதாக 7,500 ரயில் நிலையங்கள் அமைக்கப்படும்'' என்றார்.
'' நாடு முழுவதும் உள்ள முக்கியமான லெவல் கிராஸிங்குகளில் மேம்பாலங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில் மட்டும் ரூ. 9,000 கோடி மதிப்புள்ள ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன'' என்றும் லாலு தெரிவித்தார்.