பீகார் மாநிலத்தில் தேசிய அனல் மின் கழகமும் இந்திய ரயில்வேயும் இணைந்து 1,000 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை அமைக்க உள்ளன.
நபிநகரில் அமைய உள்ள இந்த நிறுவனத்திற்கு பாரதிய ரயில் பிஜுலி நிறுவனம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இரயில்வேயின் ஓட்டு மொத்த மின் தேவை 2200 மெகா வாட் என்று கணக்கிடப் பட்டுள்ளது
தற்போது ஒரு யுனிட்க்கு ரூபாய் 4.22 ஆகிறது. இந்த அனல் மின் நிலையம் அமைக்கப் படும் பட்சத்தில் ஒரு யுனிட்டுக்கு ரூபாய் 2.51 தான் ஆகும். இது 40 விழுக்காடு தற்போது வாங்கும் விலையை விடக் குறைவு,
பெரிய திட்ட அந்தஸ்தைப் பெறும் போது ஒரு யுனிட் விலை ருபாய்2. 39 அளவுக்கு மேலும் குறையும் என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத், நாடு முழுவதும் உள்ள 63,000 கி,. மீட்டருக்கும் அதிகமான ரயில்வே பாதைகளில் கிட்டதட்ட 18,000 கி. மீ. அளவுக்கு மின் மயமாக்கப் பட்டுள்ளதாகவும், இந்த பாதையில் ரயில்களை இயக்க ரயில்வேஆண்டுக்கு 5,700 கோடி ரூபாய் செலவு செய்து 13,000 மில்லியன் யூனிட் மின்சாரத்தை வாங்க வேண்டியதிருப்பதாகத் தெரிவித்தார்,
எரிசக்தித் துறையில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு அடிப்படையில் இத்திட்டத்தின் முழுபலன் கிடைக்க எரிசக்தி துறையுடன் பேசி வருவதாகவும தெரிவித்தார்.
பொருளாதார உலகமயமாதலினாலும், நாட்டில் சரக்கு போக்குவரத்துக்கு என்றே தனி ரயில் பாதை அமைக்க வேண்டியிருப்பதால் ஏற்படும் தேவைகளைக் கருத்தில் கொள்ள வேண்டிய தருணம் இது என்று லாலு குறிப்பிட்டார்,
நபிநகர் மின் திட்டம் ருபாய் 5,352 கோடியில் கட்டப்படுவதாக தெரிவித்த லாலு 10 விழுக்காடு மின் உற்பத்தி பிற தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்,
இத்திட்டத்தில் முறையே 74 விழுக்காடு அதாவது 1,188 கோடி தேசிய அனல் மின் கழகத்துக்கும், 26 விழுக்காடு இந்திய இரயில்வேயின் பங்காக, அதாவது 417 கோடி ரூபாயாகவும் இருக்கும் என்று லாலு தெரிவித்தார்.
இந்த மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தைக் கொண்டு பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், சத்திஸ்கர், மகாராஷ்டிரம், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு - மேற்கு மண்டலங்களில் உள்ள மின்சார இரயில் பாதைகள் இரயில்கள் இயக்கப் படும் என்றும் லாலு தெரிவித்தார்.