கோவா மாநிலத்தில் உள்ள மர்முகோவா மக்களவை இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இநத இடைத் தேர்தலில் கோவா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரும், வேட்பாளமான பிரான்சிஸ்கோ சார்டின்கா, இவருக்கு அடுத்தபடியாக வந்த பா.ஜ.வேட்பாளர் டாக்டர் பிலிப்ரைட் மெஸ்கூட்டாவை விட 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதி முன்பு காங்கிரஸ் வசமே இருந்தது.
இந்த தொகுதியில் கடந்த தேக்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சர்சில் அலிமிடோ ராஜினாமா செய்ததால், இப்போது இடைத் தேர்தல் நடைபெற்றது. இவர் கடந்த ஜூன் 2 ந் தேதி நடந்த கோவா சட்ட சபை தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்று கோவா பாதுகாப்பு முன்னணி என்ற கட்சியை அமைத்தார். இந்த கட்சி சார்பில் போட்டி.யிட்டு அரசு அமைக்கும் முயற்சி செய்தார். ஆனால் இவரின் கட்சி சட்ட்சபை தேர்தலில் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் இவரின் முதலமைச்சர் ஆகும் ஆசை நிராசையானது.
இவர் ராஜினாமா செய்த வெற்றிடத்தை நிரப்ப கடந்த 31 ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 5 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகளில் 35.92 விழுக்காடே பதிவானது.