இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சம்பா மற்றும் கங்ரா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 3.8ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் 6 வினாடிகள் நீடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தங்களின் வீடுகளைவிட்டு வெளியில் ஓடிவந்தனர்.
இதனால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.