Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜம்மு : விபத்தில் 5 ராணுவ வீரர்கள் பலி

ஜம்மு : விபத்தில் 5 ராணுவ வீரர்கள் பலி

Webdunia

, வியாழன், 30 ஆகஸ்ட் 2007 (12:26 IST)
ஜம்முவில் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் பாதையில் இருந்து விலகி அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 5 வீரர்கள் உயிரிழந்தனர்.

ஜம்முவில் உள்ள ராம்பான் மாவட்டத்தில் கண்ணி வெடிகளை அகற்றி சாலையை போக்குவரத்திற்கு பாதுகாப்பானதாக உறுதி செய்யும் வாகனம் திடீரென்று சாலையில் இருந்து விலகி அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தது. இதில் அந்த இடத்திலேயே 4 வீரர்கள் உயிரிழந்ததாகவும், மேலும் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் லெப்டினன் கர்னல் கோஸ்வாமி கூறினார்.

காயமுற்ற வீரர்களில் ஒருவர் ராம்பான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் அனைவரும் இந்திய ராணுவத்தின் தேசிய துப்பாக்கிப் படையின் 23வது படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்களாவர்.

ராஜேஷ் சிங் (ஓட்டுநர்), ராஜேஷ் சிங் தோமா, லாங்ஸ்நாய்க் ராஜ்குமார் யாதவ், ரிஷிதேவ், ஹவில்தா, அரவிந்த் குமார் ஆகியோர் உயிரிழந்த ராணுவ வீரர்களாவர்.

Share this Story:

Follow Webdunia tamil