43 பேர் கொல்லப்பட்ட ஹைதராபாத் குண்டு வெடிப்புக்களுக்கு காரணமான சதிகாரர்களுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்!
ஹைதராபாத்திலிருந்து 60 கி.மீ. தூரத்திலுள்ள பிபிநகரைச் சேர்ந்தவர் முஸ்தாக் அஹமது. போவானி நகர் என்ற இடத்தில் கோழி கடை நடத்திவரும் இவர், வெடிகுண்டுகளுடன் பயன்படுத்தப்பட்ட பால் பியரிங்குகளை கொடுத்து உதவியதாக காவல் துறையினர் கூறுகின்றனர்.
இவரைத் தவிர, மேலும் மூன்று பேரை, க்வாஜா மொய்னுத்தீன், ஷாம், மொபின் ஆகியோரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஹைதராபாத் குண்டு வெடிப்பு தொடர்பாக புலனாய்வி செய்ய அமைக்கப்பட்டுள்ள சிறப்பு காவல் குழுவினர், குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட நியோஜெல் - 90 எனும் ரசாயணம் வெடிபொருளாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.