அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்த விவகாரம் தொடர்பாக காங்கிரசுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள முரண்பாட்டினால் மக்களவைக்கு அடுத்த ஆண்டு மார்ச்சிற்குப் பின் தேர்தல் நடத்த வாய்ப்பிருப்பதாக பாஜக தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கையா நாயுடு,2009ஆம் ஆண்டு வரை இந்த அரசு தாங்காது. இயற்கைக்குப் புறம்பான காங்கிரஸ் - இடதுசாரி உறவு பிளவுபட்டு அதன் காரணமாக 208ஆம் ஆண்டே தேர்தல் நடக்கும் என்று கூறினார்.
தேர்தலை சந்திக்க பாஜக அவசரப்படவில்லை. ஆனால் காங்கிரசும், இடதுசாரிகளும் இடைத்தேர்தலை சந்திக்க தயாராக இல்லை என்று கூறினார்.