Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சஞ்சய் தத் எரவாடா சிறைக்கு மாற்றம்

Advertiesment
சஞ்சய் தத் எரவாடா சிறைக்கு மாற்றம்

Webdunia

, வியாழன், 2 ஆகஸ்ட் 2007 (19:21 IST)
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தி நடிகர் சஞ்சய் தத் புனே அருகே உள்ள எரவாடா சிறைக்கு மாற்றப்பட உள்ளார்.

1993 ஆம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இந்தி நடிகர் சஞ்சய் தத்திற்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மும்பை பொடா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு மும்பை ஆர்தூர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சஞ்சய் தத் புனே அருகே உள்ள எரவாடா சிறைக்கு மாற்ற உத்தரவிடப்பட்டது. அங்கு சரியான வசதி இல்லாததால் தன்னை எரவாடா சிறையில் அடைக்குமாறு சஞ்சய் கேட்டுக் கொண்டார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து நடிகர் சஞ்சய் தத் புனே அருகே உள்ள எரவாடா சிறைக்கு மாற்றப்பட உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil