பா.ஜ.க. ஆதரவுடன் கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்துவரும் மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளம், குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பது என்று முடிவு செய்துள்ளது!
புதுடெல்லியில் பி.டி.ஐ. செய்தியாளரிடம் பேசிய மதச்சார்பற்ற ஜனதா தள பேச்சாளர் தனிஷ் அலி, பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் தங்களது கட்சியின் தலைவர் தேவே கெளடாவை சந்தித்து பைரோன் சிங் ஷெகாவத்திற்கு ஆதரவு கேட்டதாகவும், ஆனால் தேவே கெளடா அதற்கு மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளிடம் இருந்து சமதூரத்தில் இருக்கவே மதச்சார்பற்ற ஜனதா தளம் முடிவெடுத்துள்ளதால், குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பது என்று முடிவெடுத்துள்ளதாக தனிஷ் அலி கூறியுள்ளார்.
மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 50 சட்டப் பேரவை உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களின் மொத்த வாக்கு மதிப்பு 16,000 ஆகும்.
பா.ஜ.க. ஆதரவுடன் கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்தும், பா.ஜ.க. ஆதரவு வேட்பாளரை மறுத்து அக்கட்சிக்கு அதிர்ச்சி அளித்துள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம்.