சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகளுடன் நேற்றிறவு நடந்த துப்பாக்கி சண்டையில் மத்திய கூடுதல் காவல் படை வீரர்கள் 17 பேர் உட்பட 41 காவலர்களை காணவில்லை.
சத்தீஸ்கர் மாநிலம் தன்டவாட மாவட்டத்தில் எலம்பட்டி என்ற இடத்தில் சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் நேற்றிரவு நக்சலைட் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் மத்திய கூடுதல் பாதுகாப்பு படை வீரகளையும் சேர்த்து மொத்தம் 115 பேர் இந்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நக்சலைட் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 39 பேர் பலியாகினர். மேலும், 17 மத்திய கூடுதல் பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 41 பேரை காணவில்லை.
இது தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில் நக்சலைட் தீவிரவாதிகளை தேடும் கூட்டு ரோந்து பணியில் 115 காவலர்கள் இடம் பெற்றிருந்ததாகவும், இதில் 71 பேர் நேற்றிரவும், 3 பேர் இன்று காலை வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.