உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைந்ததன் காரணமாக 57 வாரங்கள் காணாத அளவிற்கு ரூபாயின் பணவீக்கம் 4.28 விழுக்காடாக குறைந்துள்ளது!
ஜூன் 2 ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 4.80 விழுக்காடாக இருந்த பணவீக்கம், ஜூன் 9 ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 0.52 விழுக்காடு குறைந்து 4.28 விழுக்காடாக சரிந்துள்ளது.
இதே வாரத்தில் கடந்த ஆண்டு ரூபாயின் பணவீக்க விகிதம் 5.29 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்துப் பொருட்களின் மொத்த விலைக் குறியீடு 0.5 விழுக்காடு குறைந்து 211.9-ல் இருந்து 211.8 ஆக குறைந்துள்ளது.
உணவுப் பொருட்களுக்கான மொத்த விலைக் குறியீடு 220.4-ல் இருந்து 220.1 ஆக குறைந்துள்ளது.
ஆனால், எரிபொருட்கள், இயந்திர எண்ணெய் விலைகள் சற்று அதிகரித்துள்ளது. (யு.என்.ஐ.)