Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அணு பாதுகாப்பு : அமைச்சரவை ஒப்புதல்!

Advertiesment
அணு பாதுகாப்பு : அமைச்சரவை ஒப்புதல்!

Webdunia

, வெள்ளி, 15 ஜூன் 2007 (16:16 IST)
அணு பொருட்களை பாதுகாப்பது தொடர்பாக சர்வதேச அணு சக்தி முகமை அதன் 1980 ஆம் ஆண்டு உடன்படிக்கையில் செய்துள்ள திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது!

பிரதமர் தலைமையில் தலைநகர் டெல்லியில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, 2005 ஆம் ஆண்டு ஜூலையில் சர்வதேச அணு சக்தி முகமை அணு பொருட்களை பாதுகாப்பது தொடர்பான விதிமுறைகளை பலப்படுத்த அணு பொருள் பாதுகாப்பு உடன்படிக்கையில் செய்த திருத்தத்தை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்தது.

இதேபோல, 1962 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குற்றவாளிகள் நாடு கடத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. (ஏ.என்.ஐ.)

Share this Story:

Follow Webdunia tamil