மாயமான மலேசிய விமானம்: தலைமை விமானியே காரணம் - நீண்ட கால நண்பர் தகவல்
, வியாழன், 27 மார்ச் 2014 (09:55 IST)
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8 ஆம் தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.
சீனக்கடலுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, வியட்நாம் அருகே தோ சூ தீவுக்கு 250 கி.மீ. தொலைவில் கடலில் விழுந்து நொறுங்கியதாக முதல் கட்ட தகவல் வெளியானது முதல், இதுவரை பல்வேறு முரண்பட்ட தகவல்களே வந்து கொண்டிருக்கின்றன.ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து தென்மேற்கில் 2500 கி.மீ தொலைவில் 2 பாகங்கள் இந்தியப் பெருங்கடலில் இருப்பதாக ஆஸ்திரேலிய செயற்கைக் கோளில் அடையாளம் காணப்பட்ட்டன. மேலும் சினாவின் செயற்கைக் கோளிலும் இது போன்ற பாகங்கள் தென்பட்டன. இதைத் தொடர்ந்து இந்தியப் பெருங்கடலிலும் அதன் தென் பகுதியிலும் தேடுதல் வேட்டையில் 29 விமானங்கள், 21 கப்பல்கள், 6 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டன.இந்நிலையில் மாயமான மலேசிய விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கும் என்று மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார். மேலும் விமானத்தில் பயணம் செய்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கடலில் விமானம் விழுந்திருக்கலாம் என்று நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து விமானத்தை தேடும் பணியை நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஆனால் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் விமானம் விமானிகளால் தான் விபத்துக்கு உள்ளானது என செய்தி வெளியிட்டு வருகின்றன.
இங்கிலாந்து பத்திரிக்கைள் ஏற்கனவே அரசியல் காரணங்களுக்காக தலைமை பைலட் ஷா விமானத்தை கடத்தி இருக்கும் சாத்திய கூறுகள் உள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தன. தலைமை பைலட் அரசியலில் ஆர்வமாக இருந்தார் எனறும் எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிமின் ஆதரவாளராக இருந்து உள்ளார் எனவும் தெரிவித்திருந்தன.
இங்கிலாந்திலிருந்து வெளியாகும் டெய்லி டெலிகிராப் என்ற செய்தித்தாள் காணாமல் போன மலேசிய விமானம் குறித்து மலேசிய அதிகாரிகள் அளித்த அறிக்கைகள் முரண்பாடாக உள்ளது. விமானி குறித்த விசாரணையை திசை திருப்புகிறது.
மலேசிய அதிகாரிகள் மிகக்குறைவான தகவல்கலையே வெளியிட்டுள்ளனர். விமானம் குறித்து விசாரணை நடத்தியவர்களிம் எந்த தகவலையும் அவர்கள் சரிபார்க்கவில்லை. தற்போது இயந்திர கோளாறு காரணமாக விமானம் வெடித்திருக்கலாம் அல்லது தீ பற்றி இருக்கலாம் எனற கோணத்தில் திருப்புகிறது என அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
தலைமை விமானி ஜாகாரி அகமது ஷா சரியான மன நிலையில் இல்லை எனறு கூறப்படுகிறது. அவர் தீவிர குடும்ப பிரச்சனைகளை சந்தித்து வந்தார் என அவரது நீண்ட நாள் நண்பர் கூறியதாக் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன அவற்றில் மேலும் கூறி இருப்பதாவது:-
அவரது மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்ந்தார் என்றும், மேலும் அவருக்கு மற்றொரு பெண்ணுடனும் தொடர்பு இருந்த்து. அதனால் அந்த உறவிலும் சிக்கல் இருந்தது. தனது நிலை குறித்து அறியாத மன நிலையில் தலைமை விமானி இருந்துள்ளார். அவரது மனைவி பிரிவு மேலும் அவரது உறவி சிக்கலால் அவர் மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளன.