Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்கா அரசாங்கத்தின் மீதான வெறுப்பு; அலாஸ்கா மக்களும் ரஷ்யாவுடன் இணைய விருப்பம்

அமெரிக்கா அரசாங்கத்தின் மீதான வெறுப்பு; அலாஸ்கா மக்களும் ரஷ்யாவுடன் இணைய விருப்பம்
, புதன், 26 மார்ச் 2014 (17:19 IST)
உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமீயா சமீபத்தில் ரஷ்யாவுடன் இணைந்து கொண்டது. அதேபோல அமெரிக்காவில் இருந்து பிரிந்து ரஷ்யாவுடன் இணைவதற்கு அலாஸ்கா மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
FILE

உக்ரைன் நாட்டை ஐரோப்பிய கூட்டமைப்புடன் இணைப்பதற்கு அந்நாட்டின் எதிர்கட்சி தலைவர் தலைமையில் கீவ் நகரில் நடத்திய போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. உக்ரைன் நாட்டின் அதிபராக இருந்த விக்டர் யானுகோவிச் இப்போராட்டத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். போராட்டக் குழுவினரின் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது.

உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியாக இருந்துவந்த கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்க அப்பகுதி மக்கள் விருப்பம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, 16.03.2014 ஞாயிற்றுக்கிழமை கிரிமியாவில் பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. உக்ரைனில் இருந்து சுதந்திரம் பெறுவதாகவும், தங்கள் பகுதியை ரஷ்யாவுடன் இணைக்க விருப்பம் தெரிவித்தும் கிரிமிய மக்ககளில் 97 சதவீதம் பேர் ஆதரவாக வாக்களித்தனர். இவ்வாறு கிரிமியா ரஷியாவுடன் இணைந்தது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு இடையில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புட்டீன் இதை மகிழ்ச்சியுடன் வரவேற்று ஏற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வு உலகெங்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக மக்கள் சோவியத் வாழ்க்கையை விரும்பத் தொடங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தாங்களும் அமெரிக்காவிடம் இருந்து பிரிந்து ரஷ்யாவுடன் சேர்ந்து கொள்ள அலாஸ்கா மக்கள் விரும்புகின்றனர். அலாஸ்காவில் மொத்தம் 7,35,132 மக்கள் வசித்து வருகின்றனர். ரஷ்யாவுடன் இணைவதற்கு இதுவரை அலாஸ்காவை சேர்ந்த சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர். இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதிக்குள் பல லட்சம் பேர் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் ஒரு மாகாணமாக இதுவரை இருந்து வந்த அலாஸ்காவின் மக்களில் குறிப்பிட்ட சதவிகிதம் பேர் ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது அமெரிக்காவிற்கு பெரும் அவமானகரமாக கருதப்படுகிறது. கிரிமியா ரஷ்யாவுடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குதித்து வந்த அமெரிக்கா, தற்போது என்ன செய்யப் போகிறது என்று உலக நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil