Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பல்கலைக்கழக கட்டிடம் இடிந்து 10 மாணவர்கள் பலி

Advertiesment
பல்கலைக்கழக கட்டிடம் இடிந்து 10 மாணவர்கள் பலி
, புதன், 19 பிப்ரவரி 2014 (12:35 IST)
தென்கொரியாவில் பல்கலைக்கழக புதிய மாணவர்கள் வரவேற்பு விழா நடைபெற்ற அரங்கத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் திங்கள்கிழமை 10 மாணவர்கள் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
FILE

தென்கொரியாவின் புஸான் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு ஆய்வுகள் தொடர்பான படிப்பில் சேர்ந்துள்ள புதிய மாணவர்களுக்கான 2 நாள் வரவேற்பு விழா, தலைநகரம் சியோலில் இருந்து 300 கி.மீ. தூரத்தில் உள்ள ஜியோங்ஜு நகரில் உள்ள ஒரு கேளிக்கை விடுதி அரங்கில் நடைபெற்றது. விழாவில் 560 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தற்போது அங்கு கடும் பனிப்பொழிவுடன், மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அரங்கத்தின் மேற்கூரையில் பனி மற்றும் தண்ணீர் தேங்கி இருந்தது. இது மேற்கூரையில் ஏற்பட்டிருந்த விரிசல் வழியாக புகுந்ததில், அது இடிந்து விழுந்தது. அதன் இடிபாடுகளில் சிக்கி 10 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் அவசர நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்திற்கு அந்நாட்டின் அதிபர் பார்க் ஜியேன்-ஹை தெரிவித்துள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil