Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே! - மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே! - மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு
, புதன், 11 டிசம்பர் 2013 (17:34 IST)
2009 ஆமஆண்டில் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என ரோம் நகரை தலைமையமாகக் கொண்ட நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், மனித உரிமைகள் தினமான இன்று ஜேர்மனி நாட்டின் பிறேமன் நகரில் அறிவித்துள்ளது.
FILE

கடந்த ஒரு வார காலமாக, ஜெர்மனியின் பெரிமனில் இந்த தீர்ப்பாயத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டன. இலங்கை அரசாங்கம் மிகப்பெரிய அளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் சர்வதேச நீதிமன்றமொன்று முதல் தடவையாக இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. சர்வதேச மனித உரிமை ஒன்றியம் மற்றும் இலங்கை சமாதானத்திற்கான ஐரிஸ் ஃபோரம் ஆகியன கூட்டாக இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்திருந்தன. மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை பொதுவாக சர்வதேச நிறுவனங்களுக்கு அனுப்பி வைப்பது வழமையானது எனத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மாநாட்டிற்கு இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுமா என்பது பற்றி உறுதிப்பட எதனையும் கூற முடியாது என மக்கள் தீர்ப்பாய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளை சுதந்திர போராட்ட வீரர்களாகவோ அல்லது பயங்கரவாதிகளாகவோ அடையாளப்படுத்த முடியாது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil