Copenhagen, Denmark
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் டென்மார்க் முதலிடத்தை பெற்றுள்ளது. இந்தியாவைக் காட்டிலும் மகிழ்ச்சிக்குரிய நாடுகளாக பாகிஸ்தானும், வங்கதேசமும் கூறப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்டுள்ள உலக மகிழ்ச்சி குறித்த அறிக்கையில் தான் இத்தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இப்பட்டியலில் டென்மார்க் முழு மதிப்பெண் பெற்று முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து இப்பட்டியலில் நார்வே, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஸ்வீடன், கனடா, ஃபின்லாந்து, ஆஸ்திரியா, ஐஸ்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன.