Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஊழல் செய்த முன்னாள் ரயில்வே அமைச்சருக்கு மரண தண்டனை

ஊழல் செய்த முன்னாள் ரயில்வே அமைச்சருக்கு மரண தண்டனை
, திங்கள், 8 ஜூலை 2013 (15:21 IST)
FILE
சீனாவில் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஊழலில் ஈடுப்பட்ட முன்னாள் ரயில்வே அமைச்சருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை சீனாவில் ரயில்வே அமைச்சராக இருந்தவர் லியூ ஷிஜுன். இவருக்கு வயது 60. இவரது காலத்தில்தான் சீனாவின் ரயில்வே துறை பன்மடங்கு விரிவுபடுத்தப்பட்டு பெரும் முன்னேற்றம் அடைந்தது.

இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டில் வென்ஷு நகரில் அதிவேக ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 40 பேர் பலியாகினர். அதை தொடர்ந்து அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதனால் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.


இதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், லியூ ஷிஜுன் சுமார் 130 மில்லியன் டாலர்கள் மோசடி செய்ததும், ரயில் பாதை அமைத்தல், உள்ளிட்ட பணிகளுக்கு காண்டிராக்ட் விட்டதில் முறைகேடு நடந்ததும் தெரியவந்தது. இதனால் இவர் மீது பெய்ஜிங் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தற்போது இந்த மரண தண்டனை 2 ஆண்டுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என அறிவித்துள்ளது. அவரது அரசியல் உரிமைகள் பறிக்கவும், அவரது சொத்துக்கள் முழுவதையும் பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊழல் செய்த குற்றத்திற்காக சிக்கி தற்போது தவித்துக்கொண்டிருக்கும் லியூ ஷிஜுனுக்கு அதிகார துஷ்பிரயோகத்திற்காக மேலும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil