Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

127 வயது மூதாட்டி மரணம் - புதைக்க நல்ல நாள் பார்க்கும் குடும்பம்

Advertiesment
127 வயது மூதாட்டி மரணம் - புதைக்க நல்ல நாள் பார்க்கும் குடும்பம்
, செவ்வாய், 11 ஜூன் 2013 (17:35 IST)
FILE
உலகின் மிக அதிக வருடங்களுக்கு உயிர் வாழ்ந்தவராக கருதப்பட்ட மூதாட்டி அவரது 127 வது வயதில் காலமடைந்துள்ளார்.

உலகளவில் இதுவரை மிக வயதான பெண்மணி என்று கருதப்பட்ட லுவோ மேயசென் சீனாவில் இன்று மரணமடைந்தார்.

இவர் 1885 ஆம் ஆண்டு பிறந்ததற்கான ஆதாரப்பூர்வ ஆவணங்கள் உள்ளன. இதன் அடிப்படையில் பார்த்தால் லுவோ மேயசென்னிற்கு 127 வயது ஆகிறது.

சமீபத்தில் மரணமடைந்த ஜப்பான் மூதாட்டியின் மறைவுக்குப் பிறகு உலகின் மிக அதிக வயதான பெண்மணியாக லுவோ மேயசென் கருதப்பட்டார்.

கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த இவர், சீனாவில் உள்ள குவாங்சி மாகாணத்தில் மரணமடைந்தார்.

இந்த வயது முதிர்ந்த மூதாட்டியின் மறைவு குறித்து தெரிவித்த அவரது மகன், ஹுஆங் தெரிவிக்கையில், எனது தாய் மன வலிமை பெற்றவர். அவர் அடிப்படையில் ஒரு மென்மையான பெண்மணியாக இருந்தாலும் சில நேரங்களில் அவருக்கு கட்டுபடுத்த முடியாத கோபம் ஏற்படும். எங்கள் தாயின் உடலை எங்களின் வீட்டில் அருகே உள்ள ஒரு மலைப்பகுதியில் வைத்திருக்கிறோம், இம்மாதம் இறுதியில் ஒரு நல்ல நாள் பார்த்து அவரின் உடலை புதைக்கவுள்ளோம் எனக் கூறியிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil