Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லடாக் ஊடுருவல்:எல்லை குறித்து பேச்சு நடத்த தயார் - சீனா

Advertiesment
லடாக்
, திங்கள், 29 ஏப்ரல் 2013 (12:01 IST)
FILE
காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் 19 கி.மீ. தூரம் வரை சீன ராணுவம் ஊடுருவி உள்ளது. இந்நிலையில், இந்த பிரச்சனை தொடர்பாக இந்திய பிரதமரின் கருத்தை கவனத்தில் கொண்டு, இந்தியாவுடனான கருத்து வேறுபாடுகளை தீர்க்க இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் என சீனா தெரிவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ளனர். இதனால், அப்பகுதிக்கு இந்தியா, தனது படைகளை அனுப்பி வைத்துள்ளது.

இப்பிரச்சினையில், இருநாட்டு ராணுவ அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. படைகளை திரும்பப்பெற சீன ராணுவம் மறுத்து விட்டது.

இதற்கிடையே, பிரதமர் மன்மோகன்சிங், இப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று கூறினார்.

அதற்கு விளக்கம் அளித்து சீன வெளியுறவு அமைச்சகம் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பிரதமர் மன்மோகன்சிங்கின் கவனத்தை கருத்தை கவனத்தில் கொண்டுள்ளோம். இந்தியாவுடனான கருத்து வேறுபாடுகளை தீர்க்க இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். இருநாடுகளும் பேச்சுவார்த்தைக்கான வழிமுறை மூலம் தொடர்பு கொண்டுள்ளன. அதே சமயத்தில், எல்லை பகுதியில் அமைதியை கடைபிடிப்போம்.

சமீபகாலமாக, இந்தியாவும், சீனாவும் நட்புரீதியான ஒத்துழைப்பை வளர்த்து வருகின்றன. அதே நேரத்தில், எல்லை தகராறு உள்ளிட்ட பிரச்சினைகளை அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன. இந்த பிரச்சினைகள், இருதரப்பு உறவில் பாதிப்பு ஏற்படுத்துவதை தடுக்க விரும்புகின்றன.

என அதில் தெரிவிக்கபட்டிருந்தது.

Share this Story:

Follow Webdunia tamil