கின்னஸ் சாதனை படைத்த உலகின் உயரமான 72 மாடி ஹோட்டல்
, வியாழன், 28 பிப்ரவரி 2013 (11:22 IST)
உலகின் மிக உயரமான 72 மாடி ஹோட்டல் கட்டிடம் துபாயில் திறக்கப்பட்டுள்ளது. இந்த சொகுசு ஹோட்டல், உலகின் மிக உயரமான ஹோட்டல் என்று கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.துபாய் நகரம் தனது சாதனை பட்டியலில், 72 மாடிகள் கொண்ட அதி நவீன ஓட்டல் ஒன்றை சேர்த்துள்ளது. உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த 72 மாடி கொண்ட ஓட்டலை கடந்த செவ்வாய் அன்று முறைப்படி துபாய் திறந்துள்ளது. 355 மீட்டர் உயரமுள்ள உலகின் மிகப்பெரிய இந்த ஒட்டலின் பெயர் ஜே.டபிள்யூ. மரியட்ஸ் மார்கியூஸ் துபாய் ஆகும்.மொத்தம் 1608 அறைகளைக்கொண்ட இந்த ஹோடல்லில் மக்களின் வசதிக்காக அனைத்து அதிநவீன அம்சங்களும் நிறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.