Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பர்கரில் மாட்டிறைச்சிக்கு பதில் குதிரை,பன்றி இறைச்சி!

Advertiesment
பர்கரில் மாட்டிறைச்சிக்கு பதில் குதிரை,பன்றி இறைச்சி!
, வியாழன், 17 ஜனவரி 2013 (12:18 IST)
FILE
வெளிநாடுகளில் பிரபலமான உணவான பர்கரில் மாட்டிறைச்சிக்கு பதிலாக குதிரை மற்றும் பன்றி இறைச்சிகளை உபயோகித்திருப்பது தெரியவந்துள்ளது.

இங்கிலாந்து, மற்றும் அயர்லாந்து நாடுகளில் உள்ள பிரபலமான பல்பொருள் அங்காடி நிறுவனமான டெஸ்கோ விற்பனை செய்த பர்கரில் மாட்டிறைச்சிக்கு பதிலாக குதிரை மற்றும் பன்றி இறைச்சிகளை பயன்படுத்தியிருப்பது அண்மையில் தெரியவந்துள்ளது.

உலக அளவில் புகழ்பெற்ற இந்த நிறுவனம் தயாரித்த பார்கரின் சுவை குறித்து அயர்லாந்து நாட்டின் உணவு பாதுகாப்பு ஆணையத்திற்கு புகார்கள் குவியத் தொடங்கின.

இதையடுத்து,அந்நிறுவனத்தின் மாட்டிறைச்சி பர்கர்களின் மாதிரிகளை, அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பரிசோதனையின் இறுதியில், சோதிக்கப்பட்ட 27 பர்கர்களில் 10ல் குதிரையின் மரபணுக்களும், 17ல் பன்றியின் மரபணுக்களும் இருப்பது தெரியவந்தது.

டெஸ்கோ நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட மாதிரிகளில் இருந்த இறைச்சியின் அளவில் 29 சதவீதம் குதிரை இறைச்சி என்பதும் , 21 வகை மாட்டிறைச்சி தொடர்பான உணவு வகைகளில் பன்றியின் டி.என்.ஏ. இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த முறைகேட்டிற்கு, இறைச்சியை வழங்கிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என 'பர்கர்' தயாரிப்பு நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் தனது நிறுவனத்திற்கு வந்த அவப்பெயரை போக்கும் வகையில், டெஸ்கோ நிறுவனம் இங்கிலாந்து நாட்டில் வெளிவரும் நாளிதழ்களில் மன்னிப்பு கோரியுள்ளது. அதில், எங்கள் நிறுவனத்தால் மக்களுக்கு ஏற்பட்ட அசெளகரியத்திற்கு வருந்துகிறோம். மாட்டிறைச்சிக்கு பதிலாக வேறு இறைச்சிகளை வழங்கிய நிறுவனத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கபட்டிருந்தது.

Share this Story:

Follow Webdunia tamil