உலகின் முதல் இரயில் சுரங்க பாதைக்கு வயது 150!
, வியாழன், 10 ஜனவரி 2013 (16:17 IST)
உலகிலேயே முதன்முதலாக அமைக்கப்பட்ட சுரங்க இரயில் பாதைக்கு இன்றுடன் 150 வயது ஆகிறது.உலகின் முதல் இரயில் சுரங்க பாதை லண்டனில் அமைந்துள்ளது.1863ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 தேதி துவங்கப்பட்ட இந்த இரயில் பாதைக்கு இன்று 150 வயதாகின்றது. ஆரம்பத்தில் மிகக் குறைந்த தூரத்தில் உருவாக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை படிப்படியாக விரிவடைந்து இன்று 402 கி.மீட்டர் நீளத்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.லண்டன் டியூப் என்றழைக்கப்படும் இந்த சுரங்கப் பாதையின் வழியாக ஆண்டொன்றுக்கு லட்சம் கோடி பேர் பயணிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.