உறைபனியால் சீனாவே ஸ்தம்பித்தது
, திங்கள், 7 ஜனவரி 2013 (13:46 IST)
சீனாவில் கடும் உறைபனி காலநிலை தற்போது நிலவி வருகின்றது. இதனால், கடல்நீர் பனியாக உறைந்து துறைமுகத்தில் 1000 கப்பல்கள், பயணங்களை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றன. பேருந்து, ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் சீனாவே ஸ்தம்பித்துள்ளன.
சீனாவில் -7.4 டிகிரியாக வெப்ப நிலை குறைந்துபோனதால் அனைத்தும் உறைபனியாகிவிட்ட நிலையில் பல்வேறு சீன நகரங்கள் வெள்ளை போன்று காட்சியளிக்கிறது. இந்த பருவ நிலை மாற்றத்தால் சீன பெருங்கடலும்கூட உறைபனியாகி உள்ளது.சீனாவின் லயோனிங் மாகாணத்தின் ஜினோஹு பகுதியில் உள்ள துறைமுகத்தில் 1000 கப்பல்கள் உறைந்து நிற்கின்றன. அவைகளை மீட்க முடியாமல் கடற்படையினர் சிரமத்தில் உள்ளனர்.இதனால் ஆயிரக்கணக்கான கப்பல்கள் ஐஸ் கட்டிகளுக்கு நடுவில் சிக்கியுள்ளன. சீனாவில் கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் மோசமான தட்பவெப்ப நிலையால் பேருந்து, ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நீர் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு சீனாவில் போகல் கடல் நீர் ஐஸ்கட்டியாகி விட்டது. கடல் முழுவதும் சுமார் 27 ஆயிரம் சதுர மீட்டர் அளவுக்கு ஐஸ் கட்டிகளாக மாறியுள்ளது.தென் சீனாவிலும் இரவில் பனிப்புயல் வீசுவதால் கடும் குளிர் நிலவுகிறது. சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.கடலின் நடுவில் சிக்கியுள்ள மாலுமிகள் மீட்கும் பணியில் மீட்பு பணியினர் ஈடுபட்டுள்ளனர். உறைந்துள்ள பனிக்கட்டிகளால் கப்பல்களுக்கு சேதம் ஏற்படாதவகையில் மீட்புப்பணியில் பலர் ஈடுபட்டுள்ளதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.