டெல்லி மாணவிக்கு பாகிஸ்தான் பெண்கள் அமைப்பினர் அஞ்சலி
, புதன், 2 ஜனவரி 2013 (13:03 IST)
டெல்லியில் கல்லூரி மாணவி கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு பலியானதை கண்டித்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பெண்கள் அமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தி அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில், டெல்லி மாணவி மறைவுக்கு காரணமானவர்களை தண்டிக்க கடுமையான சட்டம் வேண்டி போராடும் இந்திய சமூக அமைப்பினருக்கு ஆதரவாக பாகிஸ்தான் பெண்கள் அமைப்பினர் சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது.இந்தியப் பெண்களுக்கு ஆதரவாக நிற்பதோடு மட்டுமில்லாமல், உலக பெண்களுக்காவும் போராட்டம் நடத்துவோம் என்றும் போராட்டகாரர்கள் கூறியுள்ளனர். பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளை களைய இந்திய - பாகிஸ்தான் ஊடகங்கள் உதவிட வேண்டுமெனவும் அப்போது கேட்டுக்கொள்ளப்பட்டது. பெண்கள் வியாபாரப் பொருட்கள் அல்ல. அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை ஆண்கள் மற்றும் சிறுவர்களிடையே உணர்த்தவேண்டும். கல்வி சட்டத்திலும் மாற்றம் தேவை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.