ஐக்கிய நாடுகள் சபையில் வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பாலஸ்தீனம் தனி நாடு அங்கீகாரம் பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான வாக்களிப்பில், இந்தியா உட்பட 138 நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இஸ்ரேல், அமெரிக்கா உட்பட 9 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளன. 41 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
மொத்தம் 193 உறுப்பினர் கொண்ட ஐ.நா. சபையில் இந்த வெற்றியின் மூலம் பாலஸ்தினத்துக்கு ஐ.நா. சபையின் உறுப்பினர் அல்லாத நாடு என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பாலஸ்தீனிய அதிபர் முஹமது அப்பாஸ் இந்த வாக்குகள் பாலஸ்தீனத்தை இஸ்ரேலிடமிருந்த காப்பாற்ற கடைசி வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.