ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 பேர் பலியானார்கள். மேலும் 60 பேர் படுகாயம் அடைந்தனர்.
காபூரில் இன்று காலை 7.30 மணியளவில் முக்கிய சாலைய நோக்கி வந்த கார் வெடித்து சிதறியது. வெடி குண்டு வெடித்த இடம் ஆப்கானிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு படைகள் அலுவலகம் இருக்கும் சாலையாகும்.
தற்கொலைப் படையை சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் அந்த காரை இயக்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர், மேலும் 60 காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பலி எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த கொடூர தாக்குதலுக்கு ஆப்கான் தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.