அயர்லாந்தில் 31 வயதான இந்தியப் பெண்மணி சவிதா ஹாலப்பானவார் என்பவருக்கு நோய் ஏற்பட்டு கருவைக் கலைத்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் அயர்லாந்து நாட்டு சட்டப்படி கருக்கலைப்பு செய்ய முடியாது என்பதால் அப்படியே விடப்பட்டு உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பமே இடிந்து போயுள்ளது.
அயர்லந்தில் சவீதா ஹலப்பநவர் என்னும் 31 வயதுமிக்க பெண் பல் மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், தனக்கு கடும் முதுகுவலி இருப்பதால், தான் கருக்கலைப்புச் செய்து கொள்ள விரும்புதாக கூறி கால்வே பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கணவருடன் சென்றுள்ளார்.
அயர்லாந்தில் மதச்சட்டப்படி கருக்கலைப்பு தடைச் செய்யப்பட்டிருப்பதால் மருத்துவர்கள் சவீதாவுக்கு கருக்கலைப்பு செய்ய மறுத்தனர்.
எனினும், தான் மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்று சவீதா எடுத்துக் கூறியும் மருத்துவமனை தரப்பில் மறுத்துவிட்டதாக தெரிகிறது. மேலும் சவீதாவின் கணவர் கருக்கலைப்புக்கு மருத்துவர்களிடம் மன்றாடிய போது அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். இந்த நிலையில் கடந்த 28-ம் தேதி அவர் உயிரிழந்தார்.
இதை தொடர்ந்து, மருத்துவமனையின் பிடிவாதமே தனது மனைவியின் மரணத்திற்கு காரணம் என்று சவீதாவின் கணவர் பிரவீன் குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து, அந்நாட்டு சுகாராத்துறை சவீதாவின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், கால்வே பல்கலைக்கழக மருத்துவமனையும் தனியே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய அரசு இது வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு பிற நாட்டு சட்டங்களால் ஏற்படும் இடையூறுகள் கவலை அளிப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் டப்லினில் உள்ள இந்திய தூதரகத்திற்க்கு இது குறித்த விசாரணையை வழிமுறைய உத்தரவிடப்பட்டுள்ளது.