அரேபிய வளைகுடா பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆளில்லா அமெரிக்க விமானம் மீது ஈரான் விமானங்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.
சரியாக நவம்பர் 1ஆம் தேதி அன்று காலை அமெரிக்க ஆளில்லா விமானமான எம்.க்யூ-1 என்ற விமானத்தின் மீது ஈரான் நாட்டை சேர்ந்த எஸ்.யூ-25 விமானம் மூலம் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் எம்.க்யூ-1 மாற்று பாதையை நோக்கி செலுத்தி துப்பாக்கி சூட்டிலிருந்து தப்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் ஈரானிய கடலோரத்தில் உள்ள சர்வதேச கடற்பகுதிகளில் சுமார் 16 கடல் மைல்கள் தூரத்தில் நடந்ததாக பாதுகாப்பு துறை செயலாளர் லியோன் பன்னெட்டா அதிபர் ஒபாமாவிடம் இது குறித்து விவரித்துள்ளதாக பென்டகன் செய்தி செயலர் ஜார்ஜ் லிட்டில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.