அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஒபாமாவுக்கு கடும் போட்டியை அளித்த ரோம்னி ஒபாமாவின் நிர்வாகத்தில் வேலைசெய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஒபாமாவின் ஜனநாயக கட்சியை எதிர்த்து அதிபர் தேர்தலில் போட்டியிட்ட குடியரசு கட்சியின் மிட் ரோம்னி, ஒபாமாவின் நிர்வாகத்தில் வேலைசெய்ய விருபுவதாக ஒரு தகவல் வெளியானது.
இதனை அடுத்து இன்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ஒபாமா. ரோம்னியுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் கூறியுள்ளார். ஒபாமா சிகாகோவில் ஆற்றிய நன்றிவுரையில், அமெரிக்காவுக்கு சிறப்பான மாற்றம் காத்திருக்கிறது. அமெரிக்க குடும்பமான நாம் நாட்டின் வளர்ச்சிக்கு ஒன்றாக பாடுபடுவோம்.நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல ரோம்னியுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் தேர்தலில் எனக்கும் ரோம்னிக்கும் வாக்களித்தோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அந்த உரையில் கூறினார்.
வேலைக்காக போராடும் சூழல் இல்லாத நாடாக அமெரிக்காவை உருவாக்குவோம். அமெரிக்க குழந்தைகள் கடன்சுமை இல்லாத எதிர்காலத்தில் வாழ வேண்டும். எனது வெற்றி அமெரிக்கர்களின் வெற்றி' என்று கூறியுள்ளார்.