இலங்கை அரசால் காவலில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மூத்தத் தலைவர் குமரன் பத்மநாதன், தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
இறுதிக்கட்டப் போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்த பின்னர், அந்த அமைப்பின் தலைவராக பத்மநாதன் தன்னை அறிவித்துக் கொண்டார்.
இந்த நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு, மலேசியாவில் கைது செய்யப்பட்ட பத்மநாதன், இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே இலங்கை அரசால் காவலில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மூத்தத் தலைவர் குமரன் பத்மநாதன், தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு எதுவும் இல்லாததால் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
முந்தைய காலங்களில் அரசுக்கு எதிராக பத்மநாபன் செயல்பட்டு வந்த போதிலும், தற்போது அவர் தங்களுடன் இணைந்து செயல்படுவதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.