விதிமுறைகளை பின்பற்றாத லண்டனில் உள்ள மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை இங்கிலாந்து அரசு ரத்து செய்துள்ளதால் இங்கு படிக்கும் 2 ஆயிரம் இந்திய மாணவர்கள் உள்பட பல நாட்டு மாணவர்களின் நிலை கேள்விகுறியாகியுள்ளது.
எனினும் மாணவர்களுக்கு மற்ற பல்கலைக்கழகங்களில் இடம் அளிக்க இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் மற்ற பல்கலை கழகங்களோ தேர்வு வைத்து உரிய மதிப்பீட்டின் படியே மாணவர்களை சேர்க்க முடியும் என அறிவித்துள்ளது.
ஆனால் இந்த மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம் இதிலும் விளையாடியுள்ளது. மாணவர்களின் மொழி மற்றும் சுய திறனை பரிசோதிக்காமல் மாணவர்கள் அனைவரையும் பலகலைக்கழகத்தில் சேர்த்துள்ளது.
பிற பலகலைக்கழகத்தின் நுழைவு தேர்வில் இந்த மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால் மாணவர்களுக்கான விசாவை இங்கிலாந்து அரசு தானாகவே ரத்து செய்து விடும். இதனால் மாணவர்கள் தாயகம் திரும்பும் நிலை ஏற்படும்.
மெட்ரோபாலிடன் பலகலைக்கழகத்தில் படிக்கும் 2000 இந்திய மாணவர்களில் பெரும்பாலும் சென்னை, டெல்லியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.