இலங்கையின் ஒற்றுமையை சிதைக்கும் முயற்சிகள் மீண்டும் நடைபெற்று வருவதாக, டெசோ மாநாடு குறித்து அந்நாட்டின் அதிபர் ராஜபக்சே குற்றம்சாற்றியுள்ளார்.
குருவிட்டா ராணுவ முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது அவர், 40 ஆண்டுகளுக்கு முன் தனி நாடு கோரி வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் போன்று, தமிழ் ஈழத்திற்கு உயிர் கொடுக்கும் முயற்சி மீண்டும் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டாலும், அதை தடுக்கும் நடவடிக்கையில் இன்னும் சில பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக ராஜபக்சே கூறியுள்ளார்.
சென்னையில் கடந்த 12ஆம் தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த டெசோ மாநாடு குறித்து ராஜபக்ச இவ்வாறு விமர்சித்துள்ளார்.