ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது எதிர்வரும் 2 ம் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், தீர்மானத்திற்கு ஆதரவாக செயல்பட பல்வேறு நாடுகளின் ஆதரவை திரட்ட, 100 அதிகாரிகளைக் களமிறக்கியுள்ளது அமெரிக்கா.
இதுத்தொடர்பாக தனது இறுதிக்கட்ட முயற்சியை முழுவீச்சுடன் அமெரிக்கா முன்னெடுத்து வருகின்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான நாடுகள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்தாலும், அதனை மீண்டும் உறுதி செய்துகொள்ளும் நோக்கில் அமெரிக்கா தனது இறுதிக்கட்ட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
அத்துடன் மார்ச் 22-ஆம் தேதிக்கான நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரத்திற்கே முதன்மையளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஜெனிவாவிற்கு அவசரமாக அழைக்கப்பட்ட அமெரிக்காவின் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள், குழுக்களாகப் பிரிந்து சென்று உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்திவருகின்றனர்.
அத்துடன், அமெரிக்காவின் தீர்மானம் குறித்து எந்தவித கருத்துகளையும் வெளியிடாது மழுப்பிக்கொண்டிருக்கும் நாடுகளின் பிரதிநிதிகளுடன் சிறப்பு கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கும் அமெரிக்கக் குழு தீர்மானித்துள்ளது என்றும், இந்தச் சந்திப்புக்களின்போது அமெரிக்க தீர்மானத்திற்கு மேலும் ஆதரவு வலுக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
News Summary: Voting on US resolution against SriLanka schedule to held on 22nd of March. In such situation US government has sent 100 US officials towards Geneva to achieve victory in resolution submitted against SriLanka.