ஒபாமாவை விஞ்சினார் மிட் ரோம்னி-கருத்துக் கணிப்பு
, செவ்வாய், 13 மார்ச் 2012 (11:03 IST)
அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தற்போதைய அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்துள்ளது.நவம்பரில் நடக்கும் தேர்தலில் ஒபாமாவை எதிர்த்து போட்டியிட உள்ள, குடியரசு கட்சியின் மிட் ரோம்னி ஒபாமாவை விட அதிக வாக்குகள் பெறுவார் என கருத்துக்கணிப்பு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.தற்போதைய நிலையில் தேர்தல் நடந்தால் 64 வயதான ரோம்னி, ஒபாமாவை வீழ்த்தி அமெரிக்காவின் அடுத்த அதிபர் ஆவார் என அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியது, தவறான பொருளாதாரக் கொள்கை, போன்றவற்றால்தான் ஒபாமாவின் செல்வாக்கு குறைந்துள்ளது. மொத்தமுள்ள 26 மாகாணங்களில் ரோம்னி தற்போது 17-ல் வெற்றி பெற்று குடியரசுக் கட்சியின் முன்னணி வேட்பாளராக உள்ளார்.