இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சிங்கப்பூர் அதிபரின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக ராஜபக்ச அங்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தின் போது ராஜபக்ச இருதரப்பு விவகாரங்கள் குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங்குடன் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜபக்சவுடன் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அதிபரின் ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்த்தன, ராஜபட்சவின் செயலர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சகத்தின் செயலர் சேனுகா செனிவிரத்ன ஆகியோரும் சிங்கப்பூர் செல்லவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.