பிலிபைன்ஸ் நாட்டில் 2 சரக்கு கப்பல்கள் திடீரென்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.
பிலிப்பைன்ஸ் நாட்டு கடற்பகுதியில் சிமெண்டு மற்றும் இரும்பு தாது பொருட்களை ஏற்றிச் சென்ற 2 சரக்கு கப்பல்கள் திடீரென்று கடலில் மூழ்க தொடங்கின.
இது குறித்து உடனடியாக பிலிப்பைன்ஸ் கடலோர பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து 3 கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கப்பல்களில் சிக்கியிருந்த 32 ஊழியர்கள் பத்திரமாக மீட்டனர்.
கப்பல்கள் மூழ்கியதற்கான காரணம் தெரியவில்லை.இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.