ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின்,சீனாவின் அமைதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்ய தேர்தலில் பிரதமர் புடினின் ஐக்கிய ரஷ்ய கட்சி முறைகேட்டில் ஈடுபட்டதாக முறைப்பாடு எழுந்துள்ளது.இதனைத் தொடர்ந்து புடினை எதிர்த்து மாஸ்கோவில் ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன.
ஆனால் அமெரிக்காதான் இந்த ஆர்ப்பாட்டத்தை தூண்டி விடுகிறது என்று புடின் குற்றம் சாட்டி உள்ளார்.
இந்நிலையில் புடினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது சீனா.அத்துடன் சீனாவின் கன்பூசியஸ் அமைதி விருதுக்கு புடின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து விருது வழங்கும் அமைப்பின் நிறுவனர் கியாவோ டமோ கூறுகையில்,லிபியா மீது நேட்டோ படைகள் தாக்குதல் நடத்துவதற்கு புடின் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும்,அதற்காக சீனாவின் அமைதி விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாககவும் தெரிவித்தார்.
அமைதி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து புடின் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை