இங்கிலாந்தின் சக்தி வாய்ந்தவராக இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் லட்சுமி மிட்டல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் வசிக்கும் சக்திவாய்ந்த ஆசிய தொழிலதிபர்களாக உள்ளவர்களின் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டுக்கான பட்டியலை இங்கிலாந்து துணை பிரதமர் நிக் கிளெக் வெளியிட்டார். அதில் இந்தியரான லட்சுமி மிட்டல் பெயர் இடம் பெற்றுள்ளது.
அவருடைய சொத்து மதிப்பு ரூ.93 ஆயிரம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.