2011ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வெனிசுலா நாட்டு பட்டதாரி மாணவி வென்றார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்த 2011 ம் ஆண்டு உலக அழகிப் போட்டியில் 122 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.
இறுதி சுற்றில் வெனிசுலா, இங்கிலாந்து, தென் கொரியா, பிலிப்பைன்ஸ், போர்டாரிகோ, தென் ஆப்ரிக்கா, ஸ்காட்லாந்து உள்ளிட்ட 15 நாட்டு அழகிகள் தகுதி பெற்றனர்.
இதில் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த, இவியன் லூனாசோல் சர்கோ என்ற 21 வயது பட்டதாரி மாணவி உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு வைர கிரீடம் அணிவிக்கப்பட்டது.
1989ஆம் ஆண்டு பிறந்த இவியன் லூனாசோல் சர்கோ, தனது 8 வயது பெற்றோரை இழந்தவர் ஆவார்.
2வது இடத்தை பிலிப்பைன்சும், 3வது இடத்தை போர்டாரிகோவும் பிடித்தது.
இந்தியா சார்பில் மும்பை மாடல் அழகி கனீஷ்தா தன்ஹார், முதல் 15 இடங்களில் கூட முன்னேறவில்லை. கடந்த 2000ஆம் ஆண்டு உலக அழகியாக பாலிவுட் நடிகை பிரியங்கோ சோப்ரா பெற்றார். அதன் பிறகு யாரும் உலக அழகி பட்டம் பெறவில்லை.