Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அசாஞ்சேவை நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு

அசாஞ்சேவை நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு
லண்டன் , புதன், 2 நவம்பர் 2011 (18:44 IST)
பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விக்கிலீக்ஸ் இணைய தள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்துமாறு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சகத்துடன் அந்நாட்டு தூதரக அதிகாரிகள் பல்வேறு நாடுகளிலிருந்து அனுப்பிய ரகசிய தகவல்களை தமது விக்கிலீக்ஸ் இணைய தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே.

இந்நிலையில் இவரது விக்கிலீக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய இரண்டு பெண்கள், அசாஞ்சே மீது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாலியல் பலாத்கார புகார் கூறினர்.

இந்த வழக்கில் அசாஞ்சே லண்டனில் இருந்தபோது கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அசாஞ்சே, தம்மை பிரிட்டனிலிருந்து ஸ்வீடனுக்கு நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்ததோடு, அசாஞ்சேவை ஸ்வீடனுக்கு நாடு கடத்தவும் உத்தரவிட்டது.

அதே சமயம் இந்த தீர்ப்பை எதிர்த்து அசாஞ்சே உச்சநீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil